- Advertisement -

ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து, திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து, திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டித்து, திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே,

Vagai

கருப்பு சட்டை அணிந்து, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

Bismi

மாவட்டத் தலைவர் பாபுபாய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் தஞ்சை அகமது கபீர், மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரிப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தோழர் மாறன், தமிழக வாழ்வுரிக் கட்சியின் நிர்வாகிகள் ராயல் ராஜா, வழக்கறிஞர் பிரபு, எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் ஜாகிர் உசேன், தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 

ஆர்ப்பாட்டத்தின் போது கருப்பு சட்டை அணிந்து, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து கோஷமிட்டனர்.

 

இதில் நிர்வாகிகள் ராஜா முகமது, சிராஜுதீன், அப்துல் ஹமீது, ஜமால், யாசர்செரீப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்