“மகாசேனா” படத்தின் டிரைலர் (Official Trailer) திருச்சியில் வெளியீடு – பட குழுவினர் கொண்டாட்டம்!

“மகாசேனா” படத்தின் டிரைலர் (Official Trailer) திருச்சியில் வெளியீடு – பட குழுவினர் கொண்டாட்டம்!

மகாசேனா திரைப்படத்தின் இயக்குனர் திருச்சியை சேர்ந்தவர் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாசேனா திரைப்படம் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதனை தொடர்ந்து தனது சொந்த ஊரான திருச்சியில் ட்ரெய்லர் வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர்கள் உடன் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு வருகை தந்து மிகச் சிறப்பாக ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார்கள்,

மகா சேனா திரைப்படத்தில் நடிகர் விமல்,சிருஷ்டி டங்கே, யோகிபாபு, கபீர் துஹான் சிங்,மஹிம்மாகுப்தா மற்றும் திருச்சியை சேர்ந்த பலரும் நடித்துள்ளனர்,

‘மகாசேனா’திரைப்படம் வருகிற டிசம்பர் 12 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஆபீஸியல் டிரைலர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வெளியிடப்பட்டது,

இந்நிகழ்ச்சியில் சினிமா குழுவினர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Bismi

நடிகர் விமல் தமிழ் சினிமா உலகில் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி ‘களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு’ போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்புடன் சேர்ந்த காமெடி பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர், திருச்சி இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான விலங்கு வெப் சீரியஸ் நடிகர் விமல்க்கு தமிழ் சினிமா உலகில் நல்ல பெயரை பெற்று தந்தது, சிருஷ்டி டங்கே இளையராஜா பாடல் மூலம் வைரலான இவர் சமீபத்தில் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானார், சிருஷ்டி டங்கே அவர்கள் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழிக்கு ரசிகர்கள் பலரும் அடிமையாகி உள்ளனர், சிருஷ்டி டங்கே சிரிப்புடன் கலந்த நடப்பையே பார்த்து வந்த ரசிகர்களுக்கு மகாசேனாவில் சிங்க பெண்ணாக இந்த படத்தில் பார்க்கலாம் என்று படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கபீர் துஹான் சிங் தமிழ் சினிமாவில் மிக குறைவாகவே படங்கள் நடித்திருந்தாலும் தல அஜித் அவர்களுடன் வேதாளம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றவர், இவர் மகாசேனா படத்தில் முற்றிலும் மாறுபட்ட வில்லனாக நடித்திருக்கிறார் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் மகாசேனா திரைப்படத்திற்கு யோகி பாபு அவர்களின் கதைக்களம் ரசிகர்களுக்கு ரசிப்பதற்கான கதைக்களமாக அமைந்துள்ளதாகவும் திரைப்பட குழுவினர் கூறுகின்றனர்

இந்த படத்தில்

விமல், சிருஷ்டி, யோகி பாபு, மற்றும் கபீர் துஹான் சிங் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்து வரும் ‘மகாசேனா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்