- Advertisement -

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் 19வது மாநில பேரவை கூட்டம் நடைபெற்றது.

0

- Advertisement -

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் 19வது மாநில பேரவை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் 19 வது மாநில பேரவை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது,
மாநில தலைவர் சின்னச்சாமி தலைமையில், அருள்தாஸ் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் வரலாறு அடங்கிய சங்க வரலாறுச் சுவடு என்ற நூலினை தசரதன் வெளியிட, முன்னாள் மாநில தலைவர் ரத்தினகிரி பெற்றுக்கொண்டார்.
மேலும் ஆண்டு அறிக்கை வரவு, செலவு அறிக்கையினை செயலாளர் திருவாரூர் ஆறுமுகம் சமர்ப்பித்தார் , இந்நிகழ்ச்சியில் 75, 80 வயது நிரம்பியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது,

Bismi

மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய தீர்மானங்களாக
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் என பெயர் வைத்திட வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது,

Vagai

நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வெளியான அரசு ஆணையம் 281 நாள் 28.10.2021 படி 5 % ஊதியம் நிர்ணயம் செய்திட விடுபட்ட முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்திட அரசினை கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
போன்ற பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன சாகித்ய அகாடமி விருது பெற்ற முன்னாள் கால்நடை ஆய்வாளர் குறிஞ்சி வேலன் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாசலம் பொதுச் செயலாளர் தாமோதரன் சங்கரபாணி நாகப்பன் ராமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர், முன்னதாக மறைந்த சங்கத்தின் பொருளாளர் வேல்முருகன் திருவுருவ படம் திறப்பு விழா நடைபெற்றது, இறுதியாக நிகழ்ச்சியில் தேவராஜன் நன்றி உரை ஆற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்