திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மூ. வீரபாண்டியன் தொடக்கவுரை நிகழ்த்தினார். பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மருத்துவர் த. அறம், பொருளாளர் ப.பா. ரமணி, துணைத் தலைவர் எம். செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் கவிஞர் கோ. கலியமூர்த்தி, மாநகர் மாவட்டச் செயலர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.