பிசான பருவ சாகுபடிக்காக, ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!
பிசான பருவ சாகுபடிக்காக, ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!


திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு அணைகளில் இருந்தும், நடப்பு பிசான பருவ சாகுபடிக்காகவும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காகவும், இன்று (நவம்பர்.1) காலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்இரா.சுகுமார் தலைமையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, தண்ணீர் திறந்து வைத்தார். இவ்விரு அணைகளிலும் இருந்து, 2026,மார்ச் 31- ஆம் தேதி முடிய, மொத்தம் 151 நாட்களுக்கு, இந்த தணணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது, குறிப்பிடத்தக்கதாகும். பாபனாசம் அணையில் இருந்து, இந்த அணையின் கீழுள்ள, 11 கால்வாய்களில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்புகள் பயன் பெறும். இதுபோல, மணிமுத்தாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால், அம்பாசமுத்திரம் வட்டத்தில், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம் பட்டி, வைராவி குளம், தெற்கு பாபபான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள, 2756.62 ஏக்கர் பாசன பரப்புகள் பயன்பெறும். இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில்,பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவ குமார், செயற்பொறியாளர் கோவிந்த ராசு, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், நகர்மன்ற தலைவர்கள் அம்பை கே.கே.சி.பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் செல்வ கணேஷ் ஆகியோர் உட்பட, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்


Comments are closed.