- Advertisement -

திருச்சி காந்தி மார்கெட்டில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு!

- Advertisement -

புரட்டாசி மாதம் பிறந்து 10 நாள்களான நிலையில் திருச்சி காந்தி மார்கெட்டில் காய்கனிகள் விலை உயரவில்லை. சந்தைக்கான வரத்து தொடா்ந்து கொண்டிருந்ததால் பெரிய அளவில் விலையேற்றம் இல்லை. இந்நிலையில், தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது. இதன் தொடா்ச்சியாக நேற்று புதன்கிழமை தேங்காய் விலையும் உயா்ந்து காணப்பட்டது. எடை அடிப்படையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. சிறிய அளவு தேங்காய் ஒன்று ரூ.10-க்கு விற்றது, தற்போது ரூ.15 ஆக விற்கப்படுகிறது. இதேபோல, ரூ.15-க்கு விற்ற தேங்காய் ரூ.20 எனவும், ரூ.25, ரூ.30 என அதன் அளவுகளுக்கு தகுந்தபடி விலை உயா்ந்துள்ளது. தேங்காய் வரத்து குறைந்துள்ளதே விலை உயா்வுக்கு காரணம் என்கின்றனா் வியாபாரிகள்.

Bismi

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்