- Advertisement -

நவராத்திரி கொலு பூஜை பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் ஈரோடு தி சென்னை சில்க்ஸ் ஜவுளி மாளிகையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது 

- Advertisement -

  • நவராத்திரி கொலு பூஜை பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் ஈரோடு தி சென்னை சில்க்ஸ் ஜவுளி மாளிகையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

சிவபெருமானுக்கு உகந்த நாள் சிவராத்திரி, அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்தது நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி விரதம் இருந்து வழிபடுவதால் நவராத்திரி விழா எனப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளிலேயே இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவார்கள்.

 

Vagai
Bismi

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் முறையை துர்காஷ்டமி,சரஸ்வதி பூஜை, விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது. விஜய தசமியுடன் நவராத்திரி விழா நிறைவு பெறும். இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது ஐதீகம். இந்த மூன்று தேவியரும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் மண்ணினால் ஆன அனைத்து கடவுளையும் ஒன்று சேர அமைத்து ஒன்பது நாள் கொண்ட பூஜையாக நடத்துவது தமிழகத்தில் வழக்கமாகும். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் ஜவுளி வீதியில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் சார்பில் நவராத்திரி கொலு பூஜை பரதநாட்டியத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, நான்காம் நாள் நேற்று(28.09.2025) நிறுவனத்தின் சார்பில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி குருபூஜையுடன் நடைபெற்றது. இந்த குரு பூஜையில் சிறப்பு விருந்தினராக கிளை மேலாளர் துவங்கி வைத்தார் பிறகு பரதநாட்டிய நிகழ்ச்சியும் கொலு பூஜையும் முடிந்தபின் சுமார் 40கும் மேற்பட்ட கலைஞர்கள் வருகை தந்து பரதநாட்டியம் ஆடினர். அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பாரம்பரிய நிகழ்ச்சியாக பரதத்தையும் கண்டு களித்து மகிழ்ந்தனர் பிறகு நிறுவனத்தின் சார்பில் பரத கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்