தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வள்ளி திருமணம் இசை நாடகம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 12.12.2025 மாலை 5.30 மணி அளவில் திருச்சி ஆர் ஆர் சபாவில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாடக விழா 12.12.2025 வெள்ளிக்கிழமை நாளை மாலை 5.30 மணி அளவில் சிங்காரத்தோப்பு RR சபாவில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க
தவத்திரு சங்கர சுவாமிகள் நினைவு நாடக விழா தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் அனுமதியுடன் நடைபெறும் விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், துணைமேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலைத்துறை பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.


Comments are closed.