ரவுடிக்குப் பிறந்தநாள் பரிசாக வாள் கொண்டு வந்த நபர் கைது!

0

பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரைச் சோ்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலாளரும், பட்டியல் ரவுடியுமான பட்டறை சுரேஷ் (எ) மைக்கேல் சுரேஷ் என்பவரின் பிறந்த நாள் விழா, அவரது ஆதரவாளர்களுடன் திருச்சி அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் நடந்துள்ளது.

இந்த நிகழ்வுக்கு வந்தவா்களின் வாகனங்களை திருவெறும்பூா் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, பட்டறை சுரேஷுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அவரது ஆதரவாளரான புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவரின் வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டதில், அதில் 79 செ.மீ. நீளமுள்ள பித்தளை வாள் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.

- Advertisement -

விசாரணையில் இந்த வாளை சதீஷ்குமாா் பட்டறை சுரேஷுன் பிறந்தநாள் பரிசாகக் கொடுப்பதற்காக எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாளைப் பறிமுதல் செய்த போலீஸாா் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் இதுபோல சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபா்களுக்கு ஆதரவாக பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களுக்கு போஸ்டா் அடிப்பவா்கள், கேக் வெட்டுபவா்கள், சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போடுபவா்கள், லைக் போடுபவா்களை மாவட்ட சமூக வலைதள கண்காணிப்புக் குழு 24 மணிநேரமும் கண்காணித்து, அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்