திருமயம் அம்மன் பட்டி அற்புத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது
திருமயம் அம்மன் பட்டி அற்புத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்மன் பட்டி கிராமத்தில் அற்புத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில், கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்த குடங்கள் எடுத்துச் சென்று அற்புத விநாயகர் கோவில் புனித கலசங்களில் நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தகோடி பெருமக்கள் திரளாக வருகை தந்து அற்புத விநாயகரை வழிபட்டு சென்றனர், கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அறுசுவை அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது விழாவை அம்மன்பட்டி ஊரார்களும் ஆயக்கட்டுதாரர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
Comments are closed.