- Advertisement -

திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் 9 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சியாக நடைபெற்றது

- Advertisement -

திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் 9 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சியாக நடைபெற்றது

 

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் 9 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது, விழாவில் முதியவர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தனர்

தொடர்ந்து இன்னர்வீல் கிளப் சார்பாக அதன் தலைவர் ஜே.மார்கரெட்,ஸ்பான்சர் ரோட்டரி கிளப் தலைவர் ஆர்டிஎன் எம் ஜோசப்ராஜ் மற்றும் ஆர்டிஎன் பி சந்தோஷ் குமார் ஆகியோர் தலைமையில் முதியோர்களுக்கு வேட்டி , சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன அதனை தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது

Vagai

இந்த நிகழ்ச்சியில் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்ல தலைவர் R.செந்தில்குமார் துணைத்தலைவர்

dr.D.கார்த்திகேயன், செயலாளர்

M.சாம் எபினேஷர், துணை செயலாளர் S.வேல்முருகன் மற்றும் இன்னர்வீல் கிளப் ராக்ஃபோர்ட் தலைவர், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

இன்றைய நவீன உலகில், வேலை நிமித்தமாக பிள்ளைகள் பிரிந்து செல்வதாலும் அல்லது போதிய பராமரிப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் பலர் முதியோர் இல்லங்களை நாடுகின்றனர்.

​முதியோர் இல்லங்களில் உள்ள சில முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் இதோ

Bismi

முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு

​மருத்துவ வசதி 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்பு மற்றும் உரிய நேரத்தில் மருந்துகள் வழங்கப்படுதல்.

​முதியவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு எளிதில் செரிக்கக்கூடிய சத்தான உணவுகள்.

 

முதியவர்கள் தனியாக இருக்கும்போது ஏற்படும் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படுகிறது.

​ஒரே வயதுடையவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைப்பதால், தனிமை உணர்வு குறைகிறது.

​மனம் விட்டுப் பேசுவதற்கும், தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நண்பர்கள் கிடைப்பார்கள்.

​பஜனைகள், உடற்பயிற்சிகள் மற்றும் சிறு விளையாட்டுக்கள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கிறது.

​அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளாக அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் தங்களை சிறப்பாகவும் நலமுடனும் பார்த்து வருவதாக அனைத்தும் காரர்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் பெருமையுடன் தெரிவித்துக் கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்