இலவச பன்முகக் கலைஞர்கள் கலைக்கூடம் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்டது

இலவச பன்முகக் கலைஞர்கள் கலைக்கூடம் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்டது

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், தற்போது பள்ளி குழந்தைகளின் நலன் கருதி,
கல்வி மேம்படுத்துதல் விதமாக கல்வி பயிற்றுவித்தல், ஓவியம் வரைதல், இயல்,இசை,நாடக கலைகளை பயிற்றுவித்தல், தற்காப்பு கலை கற்றுக் கொடுத்தல் போன்ற பன்முகக் கலைகளை கற்றுக் கொடுக்கும் இலவச பன்முகக் கலைஞர்கள் கலைக்கூடம் தர்மபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது,

இந்நிகழ்ச்சியினை அறக்கட்டளையின் பொருளாளர் பகுருதீன் அலி அகமது,
ஆலோசகர் விஜய் பிரேமா அவர்களின் வழிகாட்டுதலின்படி, பன்முகக் கலைஞர்கள் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்கள் , அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் அருண்குமார், நாகர்ஜூன் ஆகியோர்களின் ஏற்பாட்டில்,
பன்முகக் கலைஞர்கள் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர், அறக்கட்டளையின் மக்கள் தொடர்பாளர் மயில்வாகனன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு,
பன்முகக் கலைஞர்கள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுதா, வசந்தி, மங்கா ஆகியோர்களுடன் இணைந்து இலவச பன்முகக் கலைஞர்கள் களைக் கூடத்தை துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்,

- Advertisement -

அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வேல்முருகன் கூறுகையில் பள்ளி குழந்தைகள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும், அனைத்து கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் துவங்கப்பட்டுள்ளது, எனவே ஐயா APJ அப்துல் கலாம் அவர்கள் கூறியதைப் போல், மாணவச் செல்வங்கள் அனைவரும் உங்கள் கனவுகளை பெரிதாக்கி எதிர்காலத்தில் ஐயா கூறியதை போல் நல்ல உயரத்தை அடைய வேண்டும் என்பதுதான் உங்கள் எல்லாருடைய ஆசையும் என்றார்,

அத்துடன் இந்த கலைக்கூடம் தூங்குவதற்கு உதவியாக இருந்த அறக்கட்டளையின் தன்னார்வலர், தர்மபுரி மாவட்டத்தின் கலைக்கூடத்தின் பொறுப்பாளர் ஷேக் தாவூத், பொருளாளர் பகுருதீன் அலி அகமது, ஆலோசகர் விஜய் பிரேமா, மற்றும் உதவியாக இருந்த சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

 

இலவச பன்முகக் கலைக்கூடத்தில் பயில வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் அனுமதி உடன் மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்