வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-மாவட்ட ஆட்சித்தலைவர்.

வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-மாவட்ட ஆட்சித்தலைவர்.

திருநெல்வேலி,நவம்பர் 22:-

Bismi

இந்திய தலைமை தேர்தல் ஆணையமானது 2020 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தங்களை மேற்கொள்ள, அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில், வாக்காளர்களால் நிரப்பிக் கொடுக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலவலர்களின் கைபேசி செயலியில், பதிவேற்றம் செய்யும் பணிகள், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை, பாளையங்கோட்டை மண்டல அலுவலகம், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, மேலப்பாளையம் மண்டல அலுவலகம், திடியூர் பஞ்சாயத்து அலுவலகம், அம்பாசமுத்திரம் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், நேற்று முன் தினம் ( நவம்பர்.22) நேரில் பார்வையிட்டு, “ஆய்வு” செய்தார். நிரப்பப்பட்ட படிவங்களை, வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், ஒப்படைப்பதற்கு வசதியாக, இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள, 5 சட்டமன்ற தொகுதிகளிலும், “உதவி மையங்கள்” ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில், நேற்று முன் தினம் { நவம்பர்.22} மாலை 4 மணிவரையிலும் நிரப்பப்பட்ட படிவங்கள், மொத்தம் 4 லட்சத்து 95 ஆயிரத்து 565 பெறப்பட்டுள்ளன. வாக்காளர்கள், தங்களுடைய நிரப்பப்பட்ட படிவங்களை, காலதாமதம் செய்யாமல், தங்கள் அருகில் உள்ள உதவி மையங்களில் ஒப்படைத்து, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, “மாவட்ட ஆட்சியர்” சுகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்