- Advertisement -

திருநெல்வேலி மாவட்டம்,பத்தமடை பேரூராட்சி பகுதிகளில் நிலவிவரும், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்! களக்காட்டில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தீர்மானம்!

- Advertisement -

திருநெல்வேலி மாவட்டம்,பத்தமடை பேரூராட்சி பகுதிகளில் நிலவிவரும், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்! களக்காட்டில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தீர்மானம்!

 

Bismi

திருநெல்வேலி மேற்கு மாவட்டம் களக்காட்டில், எஸ்டிபிஐ மகளிர் அணி (WOMEN’S INDIA MOVEMENT) புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவி ஜன்னத் ஆலிமா தலைமையில், இன்று {ஜனவரி.21} நண்பகலில், நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ‘வீரை” ஜன்னத், அனனைவரையும் வரவேற்று, பேசினார். மாவட்ட துணை தலைவி ‘கல்லிடை’ பீர்பாத்து, மாவட்ட செயலாளர் ‘பத்தமடை’பானு , மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெனாசிர், ஆகியோர், முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ புறநகர் மாவட்ட தலைவர் எம்.எஸ்.சிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, ஆலோசனைகள் வழங்கினர். இந்த கூட்டத்தில்,* ஜனவரி 26 குடியரசுதின விழா கொடியேற்ற நிகழ்களை, மாவட்ட முழுவதும் நடத்துவது! என, தீர்மானிக்கப்பட்டது. *நெல்லை புறநகர் மாவட்டம், மூலைக்கரைப் பட்டியில் இருந்து, நாங்குநேரி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு, கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்! *பத்தமடை பேரூராட்சி பகுதிகளில் நிலவி வரும், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், தீர்த்து வைக்க வேண்டும்! * புறநகர் மாவட்டத்தில் மகளிருக்கான BLA 2 வேலைகளை,விரைவு படுத்த வேண்டும்!- ஆகிய தீர்மானங்களும், இந்த கூட்டத்தில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தலைவி பீர் பாத்து , செயலாளர் அஹமதாள், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தலைவி ஜன்னத்துல் பீர்தவ்ஸ், துணை செயலாளர் ரோஷன், பொருளாளர் மெகுராஜ் பேகம், மற்றும் மூலைக்கரை பட்டி பானு நியாஸ், ஆகியோர், கலந்து கொண்டு, கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கூட்ட நிறைவில், மாவட்ட செயலாளர் லைலத்துல் அதிக்கா, அனைவருக்கும் நன்றி கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்