காவேரி டெல்டா மாவட்டங்களில், மழை வெள்ளச் சேதங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், மாநில அரசு கோரும் தொகையை, ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்!”- கனிமொழி எம்.பி.திருநெல்வேலியில் பேட்டி!


திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திருநெல்வேலி பாளையங் கோட்டையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள, தனியார் மருத்துவமனையினை, இன்று (அக்டோபர். 26) காலையில், திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”காவேரி—டெல்டா மண்டலத்தில், மழை வெள்ள பயிர்ச்சேதங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினர், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத் தொகையினை, ஒன்றிய அரசிடமிருந்து, அப்படியே பெற்றுத்தர வேண்டும்!” என்று வலியுறுத்தினார். “தமிழ்நாடு என்றாலே, ஒன்றிய அரசு அள்ளித்தராமல், எப்பொழுதுமே கிள்ளித்தான் தருகிறது. ஒன்றிய அரசின், இதுபோன்ற நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு
பயனும் கிடைப்பது இல்லை! என்று, குறை கூறினார். முன்னதாக தூத்துக்குடியில் இருந்து, தரை மார்க்கமாக திருநெல்வேலி வந்த கனிமொழியை, கேடிசி நகர் மேம்பாலம் சந்திப்பில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் தலைவருமான (சபாநாயகருமான) “வழக்கறிஞர்” இரா. ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு. அப்துல் வகாப், தருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் “முனைவர்” ம. கிரகாம் பெல் ஆகியோர் தலைமையில், திமுக நிரவாகிகள் மற்றும் தொண்டர்கள், கதர் ஆடைகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி, அன்புடன் வரவேற்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.