மருதம் அறக்கட்டளை சார்பில் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது!

மருதம் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில், ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தீரன் நகர் பகுதியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் செயலாளர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். தலைவர்கள் கிஷோர், செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து இணை தலைவர் முருகேசன், கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

Bismi

இதில் மருத்துவர்கள் சுப்பையா, நாகேந்திரன், அன்பழகன், சிலம்புச்செல்வி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளருக்கான விருது துறையூரை சேர்ந்த மருத்துவர் வாசுதேவனுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் பொருளாளர் ராமமூர்த்தி, துணைச் செயலாளர் சந்திரமோகன் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்