தமிழக பேரூராட்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்ற திருச்சி ஆட்சியருக்கு, திருச்சி மாவட்ட சமூகநல அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து!
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்நிலையில் புதிய இயக்குநர் பிரதீப் குமாரை திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு குடி மக்கள் நல சங்க தலைவர் கோவிந்தராஜ், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் சேகரன், மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவர் ஆர்.ஏ. தாமஸ், தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் திருச்சி மாவட்ட செயலாளர் முனைவர் கார்த்திக், சாலை பயனீட்டாளர் நல குழு அய்யாரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.








Comments are closed.