அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற,58-வது தேசிய நூலக வார விழா!

தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!

அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற,58-வது தேசிய நூலக வார விழா!

தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!

Bismi

திருநெல்வேலி,நவம்பர் 13:-

தமிழ்நாடு அரசு “பொது நூலகத்துறை”யின் கீழ், பாளையங் கோட்டையில் இயங்கி வரும், மாவட்ட மத்திய நூலகம், அந்நூலகத்தின் வாசகர் வட்டம் ஆகியன இணைந்து, நேற்று (நவம்பர்.13) மாலையில்,58-வது தேசிய நூலக வார விழாவை, நூலக அரங்கில் நடத்தின. இதனையொட்டி, “நூல்கள் கண்காட்சி” ஒன்றும் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் அ.மரிய சூசை தலைமை வகித்தார். துணைத்தலைவர் “கவிஞர்”கோ. கணபதி சுப்பிரமணியன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம், முதன்மை நூலகர் கு. திருஞான சம்பந்தம், “கலை பதிப்பகம்” பதிப்பாசிரியர் கவிஞர் “பாப்பாக்குடி” இரா.செல்வமணி, நல்நூலகர் “முனைவர்” முத்துகிருஷ்ணன் ஆகியோர், முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், உதவி ஆணையாளர் து. சந்திரமோகன், கண்கட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணை செயலாளர் எஸ். முத்துசாமி, பணி நிறைவு பெற்ற துணை ஆட்சியர் தியாகராஜன், நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் அரசு நூலகத்தின் “நூலகர்” அகிலன் முத்துக்குமார், “அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்கம்” மாநில தலைவர் ந.சுப்பையா,தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் புன்னை செழியன், நூலகர்கள் மகாலட்சுமி, கண்ணுப்பிள்ளை, சீனிவாசன், ராஜேசுவரி, ஓய்வு பெற்ற நூலகர் சக்திவேல், பணியாளர்கள் முத்துராமன், முருகன் மற்றும் போட்டி தேர்வு பயிலும் மாணவ மாணவியர்கள், வாசகர்கள் என, பலரும், பெருந்திரளாக கலந்து கொண்டு நூலகள் கண்காட்சியை பார்வையிட்டனர். நிறைவாக, நூலகர் சித்தரலிங்கம் அனைவருக்கும், “நன்றி” கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்