திருச்சி பொன்மலை புனித சிலுவை மகளிர் மேல்நிலைப்பள்ளி 50வது ஆண்டு பொன்விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
திருச்சி பொன்மலை புனித சிலுவை மகளிர் மேல்நிலைப்பள்ளி 50வது ஆண்டு பொன்விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

திருச்சி பொன்மலை ரயில்வே காலனியில் புனித சிலுவை மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியானது 1975 முதல் 2025 50 வருட கல்வி சேவயில்பொன்விழா காணும் இந்த பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக பங்குத்தந்தை சேகர் செபாஸ்டின், அருட்தந்தை சகாய ஜெயகுமார், அருட்தந்தை லூர்துசாமி, பள்ளி தாளாளர் அருள் ராணி, தலைமை ஆசிரியர் பயாஸ் மரியா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இதில் மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் போது பள்ளி ஆரம்பம் முதல் தற்போது வரை நடந்த மகிழ்ச்சியான சம்பவங்கள் பள்ளி வளர்ந்து வந்த விதம் ஆகியவரை குறித்து நினைவு கூறப்பட்டு பேசப்பட்டது.

இதில் முன்னாள் மாணவிகள், பள்ளி பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்





Comments are closed.