தஞ்சை பெருவுடையார் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்
மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவகனங்கள் முழங்க சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் பாட சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் கோலாகலமாக நடைப்பெற்றது.
தஞ்சை பெருவுடையார் கோவிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவகனங்கள் முழங்க சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் பாட சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் கோலாகலமாக நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கொடியினை தொட்டு வணங்கி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் மே மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
தஞ்சை பெருவுடையார் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்ற விழாவை முன்னிட்டு, விநாயகர். வள்ளி, தெய்வானை, முருகன், சுவாமி அம்பாள். சுக்ரவார அம்மன், அஷ்ட தேவர் ஆகிய 5 பஞ்சமூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படி சட்டத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். நகரின் நான்கு ராஜவீதிகளிலும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட கொடி கோவிலை வந்தடைந்தது.
நந்தி உருவம் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட கொடியினை பக்தர்கள் தொட்டு தாங்கி பிடிக்க சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட, மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகணங்கள் இசைக்க சிறப்பு பூஜைகள் செய்து நந்தி மண்டபம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கோலாகலமாக தொடங்கிய சித்திரை பெருவிழாவை ஓட்டி நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைதிருத் தேரோட்டம் மே மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.