தளபதி விஜய் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்
தளபதி விஜய் சென்னையில் உள்ள நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு (ஏப்.19) இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர்.
அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய், சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் சென்று தனது வாக்கை செலுத்தினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிள் வந்து விஜய் வாக்களித்த விடீயோ வைரலானது குறிப்பிடத்தக்கது,
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று தமிழக வெற்றிக் கழகத்தின் x வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.