“அருவருக்கத்தக்கப் பேச்சு” தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்
“அருவருக்கத்தக்கப் பேச்சு” என நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலி கானின் கருத்துகளுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “த்ரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசிய கண்டனத்துக்குரிய கருத்துகள் என் கவனத்துக்கு வந்தன. அவரின் இந்த அருவருக்கத்தக்கப் பேச்சு நடிகைக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது. இதனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டிக்க வேண்டும். இதுபோன்ற வக்கிரமான வார்த்தைகள் பெண்களை துவண்டு போகச் செய்திடும். த்ரிஷாவுக்கு மட்டுமல்ல இது போன்ற மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் ஆதரவாக அவர்கள் உடன் நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.