திருச்சி மாவட்டத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சி மாவட்டத்தில் வரும் 16, 25, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது…

திருச்சி மாவட்டத்தில் வரும் 16.01.24 செவ்வாய் கிழமை அன்று திருவள்ளுவர் தினம், 25.01.24 வியாழன் கிழமை அன்று வடலூர் இராமலிங்கம் நினைவு நாள் மற்றும் 26.01.24 வெள்ளி கிழமை அன்று குடியரசு தினம் மேற்படி தினங்களை முன்னிட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLI, FL2, FL3, FL3A, FL3AA & FL11 அனைத்தும் மூடப்படும். மேலும் அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

