தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர்! 

தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர்!

 

Bismi

பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை, இன்று (டிசம்பர்.17) காலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சிமொழிச்சட்டம் இயற்றப்பட்ட 1956- ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதியினை நினைவு கூறிடும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்மொழி ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா இன்று ( டிசம்பர்.17) முதல், ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான இன்று ( டிசம்பர்.17) காலையில், சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கிராமியக்கலை நிகழ்ச்சிகளுடன், ஆட்சிமொழித் தொடர்பான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர், நெல்லை மண்டல தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பெ. இளங்கோ தலைமையில், பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, புறப்பட்ட இடத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகம் முன்பாக முடிவடைந்தது.மாணவ, மாணவிகளுக்கு மட்டும், பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்சிமொழிச்சட்ட வாரவிழாவின் போது, அரசுப்பணியாளர்களுக்கு, ஆட்சிமொழிச்சட்ட வரலாறு, மொழி பெயர்ப்பு, மொழிப்பயிற்சி, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி, கணிணித்தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு முதலிய பொருண்மைகள் தொடர்பில், அரசு அருங்காட்சியகத்தில் வைத்து, பயிற்சி வழங்கப்பட உள்ளது! என்பது, குறிப்பிடத்தக்கதாகும்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்