சிவா எம்பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் கைது!

- Advertisement -

சிவா எம்பி வீட்டை முற்றுகையிட  முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் கைது!

- Advertisement -

காமராஜர் குறித்து கருத்துகளை தெரிவித்த திருச்சி சிவா எம்பியை கண்டித்தும், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழர் தேசம் கட்சியின் சார்பில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சிவா எம்பி வீட்டை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழர் தேசம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வள்ளல் பாரி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி கண்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளி அருகே இன்று காலை ஒன்று கூடினர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி சிவா எம்பி வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்