திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்

- Advertisement -

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட தலைவி சித்ராதேவி தலைமையில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் நந்தினி வரவேற்பு உரையாற்றினார், மாவட்டத் துணைத் தலைவர் கோமதி கோரிக்கை விளக்க உரையாற்றினார்,TNGEA மாவட்டத் தலைவர் முனைவர் பால் பாண்டி, மாவட்டத் துணைத் தலைவர் ஜீவானந்தம் வாழ்த்துரை வழங்கினார் ஆர்ப்பாட்டத்தில் கீழ்வரும் கோரிக்கைகளை முன்னிலை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

கோரிக்கைகள்

 

*திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 

- Advertisement -

*நீதிமன்ற உத்தரவின்படி எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம வாதியம் வழங்கிட வேண்டும்.

 

*செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.

 

*நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப NMC மற்றும் IPHC பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும்.

 

*கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டும்.

 

*எம்.ஆர்.பி. தொகுப்பு புதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கிட வேண்டும்

 

போன்ற கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்