- Advertisement -

தமிழ்நாடு அரசு விரைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் – திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் தீர்மானம்!

0

- Advertisement -

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (TNGTF) திருச்சி மாவட்டப் பொதுக்குழு கூட்டம். பணி நிறைவு பாராட்டு விழா, தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கணேசன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்புரையாற்றி, தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பணி நிறைவு பெறுபவர்களுக்கு, தேர்வுநிலை, சிறப்புநிலை பெறுபவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். இறுதியாக மாவட்டப் பொருளாளர் அமுதா நன்றியுரை வழங்கினார்.

Vagai
Bismi

கூட்டத்தில் மாநிலத் தலைவர் தங்கவேல், மாநில துணைத்தலைவர் உமா, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜான்கென்னடி, மணிகண்டன், மாநில செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் குமார், பாஸ்கரன், மேரி ரோசலின், மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜன், முரளிதரன், சூரியகாந்தி, லிபின், பிரவீன் சேவியர் உள்பட அனைத்து வட்டார பொறுப்பாளர்கள், தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..,,

தமிழ்நாடு அரசு விரைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணை 243 ஐ நடைமுறைப்படுத்தி விரைவில் நடத்தப்பட வேண்டும். மாணவர் நலன் கருதி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஆறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்து ஆறாவது பட்டதாரி ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும். வருமானம் ஈட்டும் தாய் அல்லது தந்தை இழந்த பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் பெற்றோரின் இறப்பின் தன்மையை கணக்கில் கொள்ளாமல் உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்