தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் ஐம்பெரும் விழா

- Advertisement -

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் ஐம்பெரும் விழா

 

- Advertisement -

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் ஐம்பெரும் விழா மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட செயலாளர் டாக்டர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் கலைமணி முன்னிலையில், மாநிலத் துணைத் தலைவர் பாலகுமார், மாநில மண்டல செயலாளர் ராஜலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்து, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சங்கர் சிறப்புரையாற்றினர், கல்வி ஆலோசகர் டாக்டர் குமார், கல்வியாளர் வளர்மதி சரவணன், மாவட்ட சட்ட ஆலோசகர் ஹரிஹரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா, சுதந்திர போராட்ட தியாகி வேதாரண்யம் அவர்களின் 119 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, கல்வி ஊக்க தொகை வழங்கும் விழா, பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு 1000 ரூபாய் வீதம் 100 மாணவ மாணவிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் சேவை செம்மல்
ஜெய்&ஜெய் குழுமா அறக்கட்டளை நிறுவனர் ஜெய் அவர்கள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது,
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநகர மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் முருகேசன், கட்டிடக் குழு செயலாளர் மதியழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள் மாவட்ட துணைச் செயலாளர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் மற்றும் திருச்சி வடக்கு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மாவட்ட பொருளாளர் கலைமணி நன்றி உரை ஆற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்