தமிழ் மாநில காங்கிரஸ் 10 ஆம் ஆண்டு துவக்க விழா – திருச்சியில் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட த.மா.கா சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே இன்று கட்சி கொடி ஏற்றப்பட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் N. ரவி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் D.R.தர்மராஜ், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர்
K.V.G.ரவீந்திரன், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் திருச்சி D.குணா,
தமிழ் மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு அணியின் மாநில ஆலோசகர் K.S.ரவீந்திரன் மூப்பனார், திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர்
K.T. தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் S ராஜூ, முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாநகர் மாவட்டத் துணைத் தலைவருமான N.ரெங்கராஜ், இளைஞர் அணி மாநில செயலாளர்
P சிவகணேசன், மாவட்ட பொது செயலாளர்கள் வரகனேரி N.சரவணன், தாராநல்லூர் ரவிச்சந்திரன், சிவசக்தி வெங்கடேசன், அண்ணா நகர் நடராஜன், தாராநல்லூர்
N.பிரபு, சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் உசேன், மருத்துவரணி மாநகர் மாவட்ட தலைவர் லட்சுமி நந்தகுமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குட்டிமணி, சிந்தாமணி பாண்டியராஜன், பாலக்கரை பகுதி கோட்டத் தலைவர் வரகனேரி கண்ணன், பாலக்கரை கோட்டத் துணைத் தலைவர் ஹரி, எடத்தெரு முருகேசன், தாராநல்லூர் வடிவேலு, ஆழ்வார் தோப்பு சதாம், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் கமல், இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் மாலிக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், தோழர் சந்துக்கடை மோகன், மாணவர் அணி மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திக் மூப்பனார், மாணவர் அணி தெற்கு மாவட்ட தலைவர் அழகப்பன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இளைஞர் அணி மாநகர் மாவட்ட தலைவர் N. தனசேகர் நன்றி கூறினார்.