தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழர் தேசம் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் பெருகிவரும் கள்ளச்சாராய விற்பனையையும் அதனை தொடர்ந்து வரும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பரமசிவம், குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.