சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா
சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா
இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மணவைத் தமிழ் மன்ற செயலர் கவிஞர் நவமணி சுந்தரராஜ் தலைமை வகித்தார். இனிய நந்தவனம் பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றி, தமிழ் எழுத்தாளர்கள் முதல் தொகுதி நூலினை வெளியிட மணவை தமிழ் மன்ற செயலாளர் நவமணி சுந்தரராஜ், நந்தவனம் சந்திரசேகரன், மேனாள் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி,சூர்யா நினைவு அறக்கட்டளை நிறுவனர் சூர்யா சுப்பிரமணியன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கல்வி குழு தலைவர் பொற்கொடி, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். மேனாள் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி நூல் ஆய்வுரையாற்றினார். தமிழ் எழுத்தாளர்கள் நூல் ஆசிரியர் சண் தவராஜா ஏற்புரையில்,

பிறந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்தில் அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளோம். உறவுகளை இழந்த நாங்கள் சென்ற இடத்தில் உழைக்கின்றோம். படிக்கின்றோம் படைப்பாளராக இருக்கின்றோம் இன்று அனைவரும் படிக்கின்றார்கள். புத்தக வாசிப்பிலிருந்து இணையதள மூலம் வாசிக்கின்றார்கள். இணையதளத்தில் எதை வாசிக்கின்றோம் என்பதுதான் முக்கியமானது பொதுவாக புத்தகத்தை வாங்கும் பொழுது ஆசிரியர் முன்னுரையும் புத்தகத்தில் பின்அட்டையில் உள்ள கருத்தையும் வைத்தே புத்தகத்தை வாங்குவோம். இன்றளவும் வாசிப்பவர்கள் இருக்கின்றார்கள். நாங்கள் இயன்றவரை பிற மொழி கலப்பின்றி பேசுகின்றோம் என்றார்.
முன்னதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்க நிறைவாக கவிஞர் ஜனனி அந்தோணி ராஜ் நன்றி கூறினார். விழாவில் நாவை சிவம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது ஷபி,நாளை விடியும் இதழ் ஆசிரியர் அரசெழியன், யோகநாதன், மனநல ஆலோசகர் லட்சுமி நந்தகுமார்,பள்ளி ஆசிரியர் தேன்மொழி, சரஸ்வதி பாஸ்கரன், கவிஞர் புதுகை புதல்வன், கவிஞர் பீர்முகமது, சேது மாதவன், தேநீர் சந்திரசேகரன், தாளை இளவழகன், சின்னதுரை, வாழையூர் குணா, பொறியாளர் சுப்பையா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.





Comments are closed.