திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக “STER” என்னும் புதிய எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்து திருச்சி சுவேதா மருத்துவமனை மருத்துவர் சாதனை!

சேலம் மாவட்டத்தை
சேர்ந்த 37 வயது இளைஞர் சப்மியூகோசல் கட்டி – லியோமியோமா என்னும் உணவுக் குழாய் கட்டியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த கட்டியை சுவேதா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் SNK.செந்தூரன், “STER” எனப்படும் புதிய எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையை தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் SNK செந்தூரன் இந்தியாவிலேயே எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் வெகு சில மருத்துவர்களில் ஒருவர் ஆவார். மேலும் இது போன்ற சவாலான மற்றும் புதிய சிகிச்சை முறைகளில் தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தில்லைநகர் சுவேதா மருத்துவமனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இரைப்பை குடல் மற்றும் எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் SNK செந்தூரன் கூறுகையில்…

இந்த உணவுக்குழாய் கட்டியை அகற்றுவதற்கு தொரகாட்டமி எனப்படும் நெஞ்சுக்கூட்டை திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அவர் சென்ற வேறு மருத்துவமனையில் பரிந்துரை செய்துள்ளனர். தினமும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற நிலையிலிருந்த அவருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியையும் மனவேதனையும் அளித்தது. இந்த நிலையில் இப்பிரச்சினைக்கு எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றமுடியும் என்பதை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட அவர் எங்களை தொடர்பு கொண்டார். தொடர்ந்து எண்டோஸ்கோப்பிக் மூலம் உணவுக்குழாயில் இருந்த 2 செ.மீ கட்டி அகற்றப்பட்டது. இதனால் நெஞ்சுக்கூட்டை திறந்து செய்ய வேண்டிய மாபெரும் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது. எண்டோஸ்கோப்பிக் மூலம் செய்வதினால் தழும்பு இல்லாமல் வலி இல்லாமல் அடுத்த நாளே அவர் வீட்டிற்கு திரும்பினார். அவர் தின வேலைகளை மகிழ்ச்சியாக செய்ய தொடங்கி விட்டார் என்றார்.

- Advertisement -

தொடர்ந்து சுவேதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், மகப்பேறு மருத்துவரும், மற்றும் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சுவாதி நேதாஜி கூறுகையில்…

சுவேதா மருத்துவமனை திருச்சியின் முதல் பொட்டிக் மருத்துவமனை என்றும், சிறந்த நவீன எண்டோஸ்கோபி அறை, சர்வதேச தரம் வாய்ந்த லேமினர் ஃப்ளோ அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் 10 மைக்ரான் வடிகட்டி பொருத்தப்பட்ட ICU என உலகத்தர கட்டமைப்பு உள்ளடக்கியது என கூறினார். மேலும் சவாலான மற்றும் புதிய சிகிச்சை முறைகளை திறம்பட அளிக்க திறன் வாய்ந்த மருத்துவர் குழு உள்ளனர் என்று கூறி வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் டாக்டர் SNK.செந்தூரன், டாக்டர் S.சுரேஷ் (மயக்கவியல் மருத்துவர்), ICU டாக்டர் விக்னேஷ் (இன்டென்சிவிஸ்ட்) மற்றும் பிற மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் துணை மருத்துவர்களை பாராட்டினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவமனையின் இயக்குநர்கள் AS.நேதாஜி, S.தேவேந்திரன் மற்றும் மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்