- Advertisement -

திருச்சி தூய வளனார் கல்லூரியில் “பிட்ச் ஃபெஸ்ட் 2026” நிகழ்வில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

- Advertisement -

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக “PITCH FEST 2026” என்னும் இரண்டு நாள் நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் அதிபர் Dr.பவுல்ராஜ் மைக்கேல், செயலாளர் Dr.M.ஆரோக்கியசாமி சேவியர் மற்றும் முதல்வர் Dr.S.மரியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக XB Group தலைவர் Dr.S.சேவியர் பிரிட்டோ, ​அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குனர் K.சீனிவாச ராஜு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

Vagai
Bismi

இந்த நிகழ்வு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த “பிட்ச் ஃபெஸ்ட்” நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் புதிய வணிக யோசனைகளையும் , தொழில்நுட்பத் தீர்வுகளையும் சமர்ப்பித்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் Dr.D.குமார், கணினி அறிவியல் துறைத் தலைவர் Dr.S.பிரிட்டோ ரமேஷ் குமார், ஒருங்கிணைப்பாளர்கள் Dr.V. ஜூட் நிர்மல், Dr.B.ரெக்ஸ் சிரில் மற்றும் துறை மாணவர்கள் செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்