- Advertisement -

ஆன்லைன் மருந்து விற்பனை எதிர்ப்பு ஸ்ட்ரைக்: தமிழகத்தில் நாளை 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும் – சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

- Advertisement -

ஆன்லைன் மருந்து விற்பனை எதிர்ப்பு ஸ்ட்ரைக்: தமிழகத்தில் நாளை 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும் – சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

​சென்னை:

ஆன்லைன் மருந்து விற்பனையைக் கண்டித்து நாளை (மே 20) நாடு தழுவிய அளவில் மருந்தகங்கள் மூடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Vagai

​இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், அவசரத் தேவைகளுக்கான மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

​5,000 மருந்தகங்கள் தடையின்றி இயங்கும்

​தமிழகம் முழுவதும் சுமார் 50,000 சில்லறை மருந்தகங்கள் உள்ள நிலையில், நாளைய வேலைநிறுத்தத்தின் போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்தகங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். மேலும், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்துள்ள மருந்தகங்களும் நாளை திறந்திருக்கும்.

​இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 5,000 மருந்தகங்கள் நாளை தடையின்றிச் செயல்படும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

​மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம்

​மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒருங்கிணைக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா இரண்டு மருந்து ஆய்வாளர்கள் (Drug Inspectors) சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தொடர்பு எண்கள் மற்றும் விவரங்கள் சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

​ஸ்ட்ரைக் செய்யும் சங்கங்களும் முழு ஒத்துழைப்பு

Bismi

​இது மனித உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருந்து வணிகர்கள் சங்கத்துடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

​”ஸ்ட்ரைக் செய்யும் அசோசியேஷன் தரப்பில் இருந்தும் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவசரக் கால மருந்துத் தேவைகளுக்காக மாவட்ட வாரியாக அவர்களது லெட்டர் பேடில் தொடர்பு எண்களை வழங்கியுள்ளனர். பொதுமக்கள் அந்த எண்களைத் தொடர்பு கொண்டால், எந்த தாலுகாவாக இருந்தாலும் அவசர மருந்துகளை உடனடியாக வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

​ஆன்லைன் மருந்து விற்பனை: ஒன்றிய அரசே முடிவு எடுக்க வேண்டும்

​செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர்:

​ஆன்லைன் மருந்து விற்பனை கட்டுப்பாடு: ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது என்பது ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் விஷயம். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசித்து ஒன்றிய அரசுதான் தெளிவான சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும்.

​செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலி பிரஸ்கிரிப்ஷன்: AI தொழில்நுட்பம் மூலம் போலி பிரஸ்கிரிப்ஷன் தயாரித்து ஆன்லைனில் இளைஞர்கள் தூக்க மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகளை வாங்குவது குறித்து வரும் புகார்களை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதுகுறித்தும் ஒன்றிய அரசுக்குத் தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும்.

​போதை மாத்திரைகள் தடுப்பு: ஆன்லைன் மூலம் போதை தரும் மாத்திரைகள் புழங்குவதைத் தடுக்க, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

​நீட் தேர்வு நிலைப்பாடு: நீட் தேர்வு எப்போதும் கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கும்.

​நாளை அமைச்சராகத் தனது முதல் அதிகாரப்பூர்வ மருத்துவமனை ஆய்வை மேற்கொள்ளவிருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.

​#HealthMinistryTamilNadu #MedicalStrike #OnlinePharmacyIssue #MinisterArunraj #TNHealthUpdate #EmergencyMedicines

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்