- Advertisement -

திருச்சி தொன் போஸ்கோ ஐ.டி.ஐ சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி – தொழிலதிபர் அருண் நேரு தொடங்கி வைத்தார்!

0

- Advertisement -

திருச்சி சலேசிய வெள்ளி விழா மற்றும் தொன் போஸ்கோ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி வன்னாங்கோவில் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ ஐ.டி.ஐ மைதானத்தில் இன்று தொடங்கியது. தொன் போஸ்கோ ஐ.டி.ஐ சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தொழிலதிபர் அருண் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை தொடங்கி வைத்தார்.

Bismi

Vagai

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 மாவட்டங்களை சேர்ந்த 37 கபடி அணி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 51 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 41 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 31 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 11 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்வில் திமுக மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா, நவலூர் குட்டப்பட்டு மணியம் தேவராஜ், இல்லத் தலைவர்
ஜான் கென்னடி, முதல்வர் பிரான்சிஸ் சேவியர், பொருளாளர் கிறிஸ்டோபர்,
நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ், கவுன்சிலர்கள் டேவிட், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்