ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 7 ஆம் நாள் – நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்!

0

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர ரத்தின லெஷ்மி பதக்கம், மகர கர்ண பத்ரம், புஜ கீர்த்தி, ரங்கூன் அட்டிகை, சந்திர வில்லை, காசு மாலை, 2 வட முத்து மாலை, ஒட்டியாணம், அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து, வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

- Advertisement -

வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் வருகின்ற 22 ஆம் தேதியும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 23ஆம் தேதியான சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.

 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்