ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது!

0

- Advertisement -

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. வரும் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது.

- Advertisement -

ஸ்ரீரங்கம் கீழ சித்திர வீதியில் உள்ள தேரடியில் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் சுந்தர் பட்டர், உள்ளிட்ட அர்ச்சகர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடப்பட்டது. வருகின்ற 6 ஆம் தேதி நடைபெறும் தேர் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்