திருச்சி ஸ்ரீரங்கத்தில் 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது!
வினோத் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் லட்சுமி தேவி , செல்வி விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மருத்துவ முகாமில் உயர்தர லேசர் கண் புரை அறுவை சிகிச்சை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கான கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த இலவச முகாமில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா செய்திருந்தார்.