ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரும் விழா – சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரம் பங்கேற்பு!
திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் கலை ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஸ்ரீ வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட தியாகி மணப்பாறையை சேர்ந்த சுந்தரம் தலைமையுரையாற்றி, கல்வி, விளையாட்டு மற்றும் கலைகளிலும் சிறந்து விளங்கிய மாணாக்கர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கினார்.
மேலும் சிறந்த ஆசிரியர் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முதல்வர் முனைவர் பிச்சைமணி ஆண்டறிக்கையை வாசித்தார். பேரா. கருப்பையா, உடற்கல்வி இயக்குநர் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையையும், முனைவர் பிரபு கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் கலைத்துறை ஆண்டறிக்கையையும் வாசித்தனர். மாணவர் பேரவை தலைவர் சிவராஜ் உரையாற்றினார். விழா நிறைவில் முதுநிலை துணை முதல்வர் முனைவர் ஜோதி, நன்றியுரை ஆற்றினார். யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது.