திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அக்கரைப்பட்டியில் தென் சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த சாய்பாபா கோயில் தென் இந்தியாவில் சீரடி சாய்பாபாவுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டு அருளிணர்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாய்பாபா கோயில் குடும்ப நிறுவனங்களின் தலைவர் கே.சந்திரமோகன் நிர்வாக அறக்காவலர்களாக கொண்டு அறக்கட்டங்களால் திட்டமிட்டு வடிவமைத்து தரப்பட்டுள்ளது.
சீரடி சாய்பாபா விஜயதசமியன்று மகா சமாதி அடைந்தார். இந்நிலையில் விஜயதசமியான நேற்றைய தினம் சீரடி சாய்பாபாவின் 106 வது மகா சமாதி தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி சாய்பாபாவிற்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் மக்கள் கூட்டம் பெரு வெள்ளமாக வருகை புரிந்திருந்தனர். அவர்களுக்கு மகா அன்னதானம் கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.
மேலும் சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன் தலைமையில் சாய்பாபாவின் புகழ் ஒழிக்க மேளதாளங்களுடன் பாடல்கள் இசைக்கப்பட்டன. இதை கேட்ட பொதுமக்கள் பக்தி வெள்ளத்தில் நடனமாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசனம் செய்தனர்.
சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன் கூறுகையில்,…
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாய்பாபா கோயில்கள் இருந்தபோதிலும் மக்கள் மனதில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம். ஆனால் மக்கள் வெகு தூரம் சென்று சாய்பாபாவை தரிசனம் செய்வதற்கு பதிலாக திருச்சி தென் சீரடி சாய்பாபா கோயிலுக்கு வருகை தருவதன் மூலமாக தென் சீரடி சாய்பாபாவை உடனடியாக தரிசிக்க முடியும். எனது வாழ்வில் சாய்பாபா அவர்களை தரிசித்த பின்பு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. சாய்பாபா பற்றி உணர்வ பூர்வமாக தாமே பாடல்கள் எழுதி பாட உள்ளேன் என்றார்.
Comments are closed.