பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம்

0

பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம்

 

பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது, பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் அமைதியாக நடைபெற தேர்தல் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் பேராயர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் தலைமையிலும், ஆடிட்டர் எம் ரிச்சர்ட் முன்னிலையிலும் நடைபெற்றது.

 

 

 

Bismi

இப்பிராத்தனையில் 5 ஆண்டு நிலையான ஆட்சி அமையவும், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், நேர்மையாக வாக்குப்பதிவு நடைபெறவும், ஜனநாயகம் பாதுகாக்கப்படவும்,ஜாதி மத இன கலவரம் ஏற்படாமல் இருக்கவும், தமிழக அனைத்து கட்சி தலைவர்களுக்காக சமூக ஒற்றுமை மற்றும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படவும், மனித நேயம் காக்கப்படவும், மக்கள் குறைகள் முழுமையாக தீர்க்கப்படவும், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும், கம்ப்யூட்டர் எந்திரங்கள், வாக்குப்பதிவுக்காக தேர்தல் நாளில் மழை அதிக வெயில் இல்லாமல் இருக்கவும், இந்த தேர்தல் சிறப்பாக அமைதியாக நடைபெறவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

 

 

 

 

பிரார்த்தனை கூட்டத்தில் பாஸ்டர் ரமேஷ், எபினேசர் பாஸ்கர் நெகேமியா, பாஸ்டர் ஜான் டோமினிக், பாஸ்டர் இருதயராஜ், பாஸ்டர் சகாயராஜ், பாஸ்டர் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மனோகரி ராஜ்குமார் நன்றி கூறினார். இதில் பொதுமக்களும் திருச்சபை மக்களும் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்