திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இதுவரை 7 மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் – உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் – முன்னாள் எம்.எல்.ஏ தொட்டியம் ராஜசேகரன் பேட்டி!

0

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மானாமதுரை நகரச் செயலாளராக உள்ளார். இவரது மகள் தாரணி. இவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் (தனலட்சுமி சீனிவாசன்) பொறியியல் கல்லூரியில் பீ டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கள் கிழமை தாரணி தனது அப்பா பாலாஜிக்கு தொடர்பு கொண்டு கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மெண்டார் (Mentor) ஆசிரியர் மிகவும் கடமையாக திட்டுவதாகவும் என்னை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பாலாஜி தனது மகளை பார்க்க நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு கல்லூரிக்கு வந்துள்ளார். தொடர்ந்து விடுதிக்கு சென்று மகளை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் மாலை 6:30 மணி வரை அவரது மகளை பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஏன் கால தாமதம் படுத்துகிறீர்கள் என கூறி உள்ளே செல்ல பாலாஜி முயற்சித்துள்ளார்.

உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் பாலாஜியை ஐந்தாவது மாடிக்கு அழைத்து சென்று அரை எண் 512 இல் படுக்கையில் தனது மகள் தாரணி பிணமாக கிடப்பதை காண்பித்துள்ளனர். மேலும் தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

- Advertisement -

தனது மகள் தாரணி தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. தனது மகளின் இறப்பில் கல்லூரி நிர்வாகம் மீது சந்தேகம் உள்ளது. தனது மகள் தாரணி இறப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தாரணியின் தந்தை பாலாஜி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டு தனது மகளின் உடற்கூறாய்வு வீடியோ பதிவு மூலம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பின்னர் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் வீடியோ பதிவு மூலம் நேற்று மாலை உடற்கூறாய்வு செய்யப்பட்டு தாரணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் தாரணியின் உறவினர்கள், தாரணி உயிரிழப்பு குறித்து புகார் அளித்தனர்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறும் போது…..

திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் ( தனலட்சுமி ஸ்ரீனிவாசன்) கல்லூரி விடுதியில் உயிரிழந்த கல்லூரி மாணவி தாரணியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தி உள்ளோம். மேலும் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியில் தற்போது வரை 7 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்