- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் ₹.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

- Advertisement -

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மூன்று பயணிகள் ரூ. 64.02 லட்சம் மதிப்புள்ள 898 கிராம் தங்கத்தை கம்பிகள் உள்ளிட்ட வடிவங்களில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்