வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த பிரபல காமெடி நடிகர் சேஷூ இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கி வந்த நிலையில் சற்று முன் சேஷூ காலமானார்.
இவர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை ரசிக்க வைத்திருந்தார். இவரின் காட்சிகளுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது.
லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.