எதிர்க்கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து!
எதிர்க்கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு தலைவர்களும் சோனியா காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,” சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.
.


Comments are closed.