திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா
திருச்சி கே ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு இரண்டாவது பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கேர் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பா. பிரதீப் செந்த் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சுகுமார் துரைசாமி அவர்கள் பட்டமளிப்பு விழாவிற்கான அறிக்கையையும் உறுதி மொழியையும் வாசித்தார்,
சிறப்பு விருந்தினராக ஆக்சிஸ் வங்கி திருச்சி முன்னாள் துணைத் தலைவர் பார்த்தசாரதி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் உரையாற்றினார். அவரது உரையில் மாணவர்கள் ஒற்றுமையை பேணி காக்க வேண்டும் என்றும் தங்கள் இலக்கை அடைவதற்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள் என்றும் பெரிய கனவுகளை செயல்படுத்த திடமான சித்தத்தோடு சிந்தனைகளையும் வளர்த்துக்கொண்டு பணிவையும் நல்ல கனவுகளையும் வளர்த்துக்கொண்டு உங்களுடைய எதிர்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள் என்று வலியுறுத்தி உரையாற்றினார் . அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன பிஎஸ்சி உட் கட்ட வடிவமைப்பியல் துறை மற்றும் காட்சி தொடர்பு துறையிலும் பயின்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் பல்கலைக்கழக அளவிலான தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களுடன் தரச் சான்றிதழ் பெற்ற மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவினை வணிகவியல் துறை தலைவர் முனைவர் அப்துல் சுபான் அவர்கள் ஒருங்கிணைத்தார் . இவ்விழாவில் பல்வேறு துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.