தேசிய தலைவர் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் எஸ்டிபிஐ திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். மண்டல செயலாளர் நியமத்துல்லா, வடக்கு மாவட்ட தலைவர் ஜவகர் அலி, தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் ரஹீம், தளபதி அப்பாஸ், தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இமாம் ஹஸ்ஸான் பைஜி கலந்து கொண்டு தேசிய தலைவரை விடுதலை செய்யக்கோரி கண்டன உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து திருச்சி ஜாகீர் கண்டன உரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.

- Advertisement -

மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் SDTU தொழிற்சங்க மாநில செயலாளர் முகம்மது ரபீக், வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அலாவுதீன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் மதர் ஜமால் முகம்மது, சதாம் உசேன், மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு), கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா, மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, திருவெறும்பூர் தொகுதி தலைவர் ஷேக் முகம்மது, ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர், மணப்பாறை தொகுதி செயலாளர் ஜின்னா, வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்கரை மீரான், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பக்ருதீன், விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, தொண்டரணி மாவட்டத் தலைவர் முகமது ஆரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான், கல்வியாளர் அணி திருச்சி மாவட்ட செயலாளர் பத்ரு ஜமான் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜித் தொகுத்து வழங்க, இறுதியாக மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி நன்றி உரையாற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்