சமயபுரம் மாரியம்மன் தங்கக் கமல வாகனத்தில் புறப்பாடு
சமயபுரம் மாரியம்மன் தங்கக் கமல வாகனத்தில் புறப்பாடு
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி 8 ஆம் திருநாள்
அன்று தேங்காய் பழ கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், தங்க கமல வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.அதற்கு முன்னதாக காலை 10 மணி அளவில் அம்மன் மூலஸ்தானத்தில் இருந்து வசந்த மண்டபம் புறப்பட்டு சென்று மணி 12 மணி அளவில் திருமஞ்சனம் சாற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாகான ஏற்பாடு விழா குழு தலைவரும், சா. கண்ணனூர் பேரூராட்சி கவுன்சிலருமான எஸ் ஆர் மணிகண்டன் மற்றும் வியாபாரிகள் செய்தனர்.