சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
தமிழ்நாட்டில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும், இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில், இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் பூச்சொரிதல் நடைபெற்று, அதன் பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 16ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அதில் ஒரு முக்கிய விழாவான தெப்பத் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. கோவில் இருந்து அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து எழுந்தருளினர்,அங்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை செய்தனர்.
தெப்பத்தின் நான்கு பக்கங்களிலும் ஏராளமான பக்தர்கள் நின்று அம்மனை தரிசித்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வி எஸ் பி இளங்கோவன், ராஜ சுகந்தி, பிச்சைமணி, லட்சுமணன்,கோவில் இணை ஆணையர்/ தக்கார் பிரகாஷ், இணை ஆணையர் கல்யாணி, மணியகாரர் பழனிவேல் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமயபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.