அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், ஜே கே சி அறக்கட்டளை, திருக்குறள் பேரவை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
திருச்சி குண்டூர் பகுதியில்
அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், கே கே சி அறக்கட்டளை, திருக்குறள் பேரவை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சி பி ரமேஷ் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் டாக்டர் சுப்பையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புடவைகள் மற்றும் மருந்துகள் வழங்கினார்,
மேலும் நிகழ்ச்சியில் ஜமால் முகமது பேராசிரியர் சையது சாகிர் ஹசன், கிராமலையா நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன், பேராசிரியர் சந்திரசேகர், வழக்கறிஞர் அருள் செல்வி, ஜே கே சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜான் ராஜ்குமார், சாமுவேல் மற்றும் வேல்முருகன் விக்னேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்,
சு
நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு புடவைகள், மருந்துகள், பொங்கல் மற்றும் கரும்பு ஆகியவற்றை பெற்று பயனடைந்தனர், ஆடவர்க்கு கைலி, பொங்கல் , மருந்து, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது.